Friday, March 13, 2009

Baba (Film) inspired from the book "Autobiography of a yogi"

பாபா படத்தில் வரும் பல காட்சிகள் "யோகியின் சுயசரிதை" என்ற புத்தகத்தை தழுவி எடுக்கப்பட்டதாக நான் உணர்கிறேன்.

1. பட்டம் பறந்து வந்து ரஜினியிடம் விழுவது.
2. விதமான ஊர்தி இல்லாமல் இமயமலை செல்வது.
3. தியானத்தின் மூலம் ஜப்பானிய இளைஞரை காப்பாற்றுவது.
4. மந்திரத்தை தவறாக பயன்படுத்தும் பொது சுஜாதா, ரஜினிக்கு அறிவுரை வழங்குவது. மேற்கூறிய காட்சிகள் எல்லாம் இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

இப்புத்தகத்தின் ஆசிரியர் சுவாமி யோகானந்தர், மஹா அவதார் பாபாஜியின் மூன்றாம் தலைமுறை சிஷ்யர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுவாமி யோகானந்தர் கிரியா யோகத்தின்(சரியாக நினைவில்லை) மூலமாக இமயமலைக்கு சென்று அங்குள்ள யோகிகளை தரிசிக்கிறார். (ரஜினியும் சாயாஜி ஷிண்டேயும் எந்த விதமான ஊர்தி இல்லாமல் இமயமலை செல்வது.)

யோகனந்தரின் அக்காவிற்கு ஒருமுறை கையில் கட்டி வந்தது. அப்போது அக்கா கட்டி உள்ள இடத்தில மருந்து போடுகிறாள். யோகானந்தர் தன் கையில் கட்டியே இல்லாமல் மருந்து போடுவதை பார்த்து அக்கா அவனை திட்ட, உடனே யோகானந்தர், நாளை எனது கையில் மருந்து தடவப்பட்ட இடத்தில கட்டி உருவாகும். உனது கட்டி இருமடங்காகும் என்று கூற அவ்வாறே நேர்ந்தது. அக்கா இதை அன்னையிடம் கூற, அவர் யோகனந்தருக்கு அறிவுரை வழகுகிறார் பிரார்த்தனையை ஒருபோதும் தவறாக பயன்படுத்தகூடதென்று. (மந்திரத்தை தவறாக பயன்படுத்தும் பொது சுஜாதா, ரஜினிக்கு அறிவுரை வழங்குவது.)

தன்பிரார்த்தனையின் சக்தியை அக்காவுக்கு நிருபிக்க வானில் பறக்கும் பட்டத்தை தனக்கு அருகில் விழவைக்கிறார். அக்கா அது தானாக நடந்த நிகழ்வென்று எண்ணி நம்ப மறுக்கிறார். யோகானந்தர் மறுமடியும் பட்டத்தை தன் அருகில் விழ வைக்க அக்கா, தெய்வத்தாய் தம்பியின் பிரார்த்தனைக்கு குரல் கொடுக்கிறாள் என்று கூறிக்கொண்டு தன் அன்னையை நோக்கி ஓடுகிறாள். (ரஜினி இருமுறை மந்திரத்தை பிரயோகித்து பட்டத்தை வரச்செய்வது)

ஒருமுறை யோகானந்தர் தீராத நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு உயிருக்கு போரடிகொண்டிருந்தார். அப்போது அவரது அன்னை, பாபாஜியின் சிஷ்யரான லகிரி மகாச்சயரின் படத்தை காட்டி அவரை பிரார்த்தனை செய்ய சொன்னார். லாகிரி மகாசயரின் அருளால் யோகானந்தர் குணமடைந்தார். (ரஜினி பிரார்த்தனையின் மூலம் ஜப்பானிய இளைஞரை காப்பாற்றுவது.)

லாகிரி மகாசயர்(பாபாஜியின் முதன்மை சீடர்) இதற்கு முன்னர் யோகனந்தரின் பெற்றோருக்கு கிரியா யோகத்தை அருளியுள்ளார். அவரே தனது புகைப்படம் ஒன்றையும் கொடுத்துள்ளார். அதனால் அந்த படம் சக்தி வாய்ந்ததாக காணப்பட்டது. லாகிரி மகாசயர் தன்னை ஒருபோதும் புகைப்படம் எடுக்க அனுமதித்ததில்லை. மீறி ஒருவன் புகைப்படம் எடுத்தபோது அவரைத்தவிர மற்ற அனைவரும் அந்த புகைபடத்தில் இருந்தனர். அப்போது லாகிரி மகாசயர் சொன்னார், " பூத உடலை படம் பிடிக்கலாம், ஆன்மாவை படம் பிடிக்க முடியாது என்று " . ஆனால் நம்மவர்கள் வற்புறுத்த தன்னை ஒரே ஒரு புகைப்படம் எடுக்க அனுமதித்தார். அந்த புகைபடத்தை லாகிரி மகாசயர் யோகனந்தரின் பெற்றோரிடம் வழங்கியிருந்தார்.

மேற்கூறிய நிகழ்ச்சிகள் யோகனந்தரின் இளமைபருவதில் நடந்தது. (பாபா படத்தில் ரஜினியின் செய்கைகள் யோகனந்தரின் செய்கைகளுக்கு ஒத்தது என்று நான் உணர்கிறேன்) இப்புத்தகத்தில் ஒரே ஒரு அத்தியாயம் மட்டுமே படித்துள்ளேன். அதற்குள் இதனை விஷயங்களா என்று என்னும்போது புத்தகத்தை முழுவதுமாக படிக்க வேண்டும் என்ற ஆவல் எனக்கு ஏற்படுகிறது. இப்புத்தகத்தை படித்தவர்கள் சொன்னார்கள், " இது ஒரு ஆன்மீக பொக்கிஷம்" என்று. பாபா படத்தை குப்பை என்று சொன்னவர்கள் இப்புத்தகத்தை படித்தால் மேற்கூறியதை வழிமொழிவார்கள்.

என்னை பொறுத்தவரை பாபா படம் ஒரு பொக்கிஷம் (புரிந்தவர்களுக்கு!)ஸ்ரீ ராகவேந்திரர் படத்தைப்போல நாம் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம்.

ரஜினி ஏன் அடிக்கடி இமயமலை செல்கிறார் என்று கேட்பவர்கள் இப்புத்தகத்தை ஒருமுறை படிக்கவும்.

பாபா - தெரிந்தது கைய்யளவு! தெரியாதது உலகளவு!


No comments: